தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 21 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் நான்கு வண்ணப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது. அவற்றில் பச்சை நிற பிரிவு மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.
   
விழாவிற்க்கு லோடு ஸ்டார் மாரிடைம் ஷிப்பிங் ஏஜென்ஸியின் கிளை மேலாளர் முகமது ஷஹரியா தலைமை தாங்கி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

முன்னதாக பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். விழாவில் சுதன்கீலா், டாக்டா் மகிழ்ஜான், மற்றும் ஆசிாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வர் காளீஸ்வரி நன்றி கூறினாா்.