தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சி சிறுப்பாடு மற்றும் சவேரியார்புரம் கிராம மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் சிறுப்பாடு சேவை மையத்தில் நடைபெற்றது.



ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.

மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் மகாராஜா, பானு வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி, ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம் ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன் ஏஞ்சலின் ஜெனிட்டா பொன்னரசு நாராயணன் மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ராஜா ஸ்டாலின் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நாராயணன் தொண்டரணி சைமன் நெசவாளர் அணி மைக்கேல் மகளிரணி ஜெயா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.