ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்குச்சாலை, பெரியநத்தம், வடக்கு மற்றும் தெற்கு சிந்தலக்கட்டை, P. சுப்பிரமணியபுரம் கிராம மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம்  குறுக்குச்சாலை இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் அறிவழகன், சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் கழக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் ஜேக்கப் மைக்கேல் முருகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.