முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மொத்தம் 123.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
கோபாலபுரம் முதல் பன்னீர்குளம் வரை O/0-2/0 சாலை மேம்பாட்டு பணிகள் 96.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மேல மணியாச்சி முதல் மருதன் வாழ்வு செல்லும் O/0-800 சாலை மேம்பாட்டு பணிகள் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கின.
இந்த பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சிகளில் உதவி பொறியாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், ஊராட்சி செயலர்கள் கண்ணன், ராஜன், ஒன்றிய பொருளாளர் பண்டாரம், கோபாலபுரம் கிளை செயலாளர் கனகராஜ், இளைஞரணி பொன்ராஜ், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, மகளிரணி ராணி, பாக்கியசெல்வி, காளியம்மாள், சீதா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.