புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர். பூவை மூர்த்தியார் (எ) பூவையார் நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.



அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி, அவரது தியாகத்தை நினைவு கூர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த அவரை போற்றும் விதமாக வீர வணக்க கோஷங்களை எழுப்பி மரியாதை செய்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, நினைவேந்தல் நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத் துணைச் செயலாளர் அந்தோணிச்சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொறியாளர் துறை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். அகமது, தமிழக முன்னேற்றக் கழகம் மாநில பொதுச் செயலாளர் ராஜா, ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.

புரட்சி பாரதம் கட்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிறுலட்சுமி, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் தீபசித்ரா, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட வணிகர் அணி செயலாளர் சுடலை மாடன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மைக்கேல்ராஜ், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் மாரியப்பன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் வேலம்மாள், 59 வது வார்டு வட்டச் செயலாளர் சூசை மாணிக்கம் உட்பட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.