தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று (05.11.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிதாக 56 மனுதாரர்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் மற்றும் தீபு ஆகியோரிடம் சமர்ப்பித்தனர்.
மனுதாரர்கள் முன்வைத்த குறைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த கூடுதல் கண்காணிப்பாளர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடி விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் வாரந்தோறும் நடைபெறும் இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில், காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாதவர்கள், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் – 56 பேர் மனு அளித்தனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா – பருவமழை செழித்து விவசாயம் வளமுடன் சிறப்பாக நடைபெற வேண்டி பிரார்த்தனை!!
அடுத்த
நீர்த்தேக்கம் முதல் நிழற்குடை வரை – ஒட்டப்பிடாரத்தில் வளர்ச்சி ஒளி பரப்பும் சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026