தூத்துக்குடி மாநகர் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷனில் வைத்து புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இளம் புரட்சியாளர் பூவை டாக்டர்.M. ஜெகன் மூர்த்தியார் MLA, ஆணை கேட்ப திமுக ஆட்சியில் தொடர்ந்து பட்டியலின சமூக மக்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும்,



ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்திட உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி   தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மு. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் K.M. ஸ்ரீதர் வழக்கறிஞர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம், மாநில வழக்கறிஞரணி செயலாளர் கே.எம். ஸ்ரீதர் கூறுகையில், ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டமன்றத்தை கூட்டி உடனே தனி சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

ஆணவ படுகொலையில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் இதுபோன்று தனிச்சட்டம் இயற்றினால் மட்டுமே ஆணவ படுகொலை நடைபெறுவதை தடுக்க முடியும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இணை செயலாளர் சி. எட்வின் ஜோசப், தூத்துக்குடி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. இந்திரன், மு. அந்தோணிசாமி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் S. சிறுலட்சுமி, மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் M. சந்தியாகு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட APLF அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் சி. கணேசன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறியாளர் துறை செயலாளர் த. மகேந்திரன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் V. சிவனனைந்த பெருமாள், தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் மாரிமுத்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் A. தீப சித்ரா, M. மாரியம்மாள், T. வேலம்மாள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் C. மாரியப்பன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட வணிகர் அணி செயலாளர் சுடலை மாடன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் தாளமுத்து நகர் மைக்கேல் ராஜ், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் ஞா. மைக்கேல் ராஜ், தூத்துக்குடி மாநகர் 53 வது வார்டு வட்ட செயலாளர் M. முத்துகிருஷ்ணன், மகளிர் அணி அழகுமாரி, ஆகியோர்களும் கோவில்பட்டி நகரச் செயலாளர் ஜெயபிரகாஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் தம்பி ராஜ், கோவில்பட்டி ஊராட்சி  ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி, கயத்தார் பொறுப்பாளர் செல்லத்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் ராணி மற்றும் பிச்சையா உள்ளிட்ட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் திரளாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.