தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளின் காரணமாக வரும் 23.09.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு, அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன் பகுதி, நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம், VMS நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், N.G.O காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணா நகர் 2, 3வது தெரு, கோக்கூர், சின்னக் கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

அந்நாளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளின் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு மின்சார வாரியத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.