தூத்துக்குடியில் மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டமானது மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது 50 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கவுன்சிலர் சரவணகுமார் மனு ஒன்றை அளித்தார்.
கவுன்சிலர் சரவணகுமார் மேயரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டுக்கு உட்பட்ட அமுதாநகர், கிருபைநகர், கிரேஸ் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்த பகுதிகளில் தற்காலிக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டால் உள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே மேயர் அவர்கள் இந்த பகுதி ஆய்வு செய்து உடனடியாக தற்காலிக கான்கிரீட் சாலை அமைக்க உத்தரவு பிறப்பிக்குமாறும்,
அதோடு 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெரு தொடர்ச்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு குடிநீர் விநியோகத்தின் போதும் சரியாக குடிநீர் கிடைப்பதில்லை, இந்த புகாரை ஆய்வு செய்த துணை ஆணையாளர் அவர்கள் பிரையன்ட் நகர் OHT யில் இருக்கும் அப்பகுதி சப்ளையை என்.ஜீ.ஓ. காலனி OHT யில் மாற்றி அமைத்தால் குடிநீர் சீராக கிடைக்கும் என கூறியிருந்தார். ஆனால் அப்பணியானது இதுவரை நடைபெறவில்லை, எனவே தாங்கள் இதையும் ஆய்வு செய்து சீரான குடிநீர் மற்றும் தற்காலிக கான்கிரீட் சாலை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருமாறு தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் என்று மேயரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையாளராக பானோத் ம்ருகேந்தர் லால் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் தற்காலிக கான்கிரீட் சாலை, சீரான குடிநீர் வசதி குறித்து கவுன்சிலர் சரவணகுமார் மேயரிடம் மனு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் மேற்கு மற்றும் வடக்கு ஒன்றிய வாக்குசாவடி முகவர்களுக்கான மக்களுடன் ஸ்டாலின் செயலியின் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் தனியார் மற்றும் அரசு நிலங்களில் உள்ள உடை (கருவேல) மரங்களை அகற்ற வேண்டும் கவுன்சிலர் மந்திரமூர்த்தி கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026