சமூக நீதி, தேசிய ஒற்றுமை, மனிதநேயம் ஆகிய உயர்ந்த கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த தியாகத் திலகம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி இன்று (30.10.2025) மாநிலம் முழுவதும் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
இந்நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தேவரின் சிலை முன்னர் மலரஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, வக்கீல் ரமேஷ் பாண்டியன் அவர்கள் பசும்பொன் தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “பசும்பொன் தேவர் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்லாது, சமூக ஒற்றுமைக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பு செய்தவர். அவரின் தியாகம் நம் நெஞ்சில் என்றும் நிற்கும். இன்றைய இளைய தலைமுறை தேவரின் சிந்தனைகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
தேவரின் நினைவு நாளை ஒட்டி, மக்கள் அனைவரும் அவரது உயர்ந்த கொள்கைகளையும் சமூக நீதி நம்பிக்கையையும் பின்பற்றி நடப்பதே அவருக்கு வழங்கும் உண்மையான மரியாதை என வக்கீல் ரமேஷ் பாண்டியன் கூறினார்.
தூத்துக்குடி
பசும்பொன் தேவரின் தியாகம் நெஞ்சில் நிற்கும் – ஜெயந்தியில் வக்கீல் ரமேஷ் பாண்டியன் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
103 ஆண்டுகள் நம்பிக்கையின் பயணம் – வரலாற்றிலேயே அதிக லாபம் ஈட்டிய தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி!
அடுத்த
முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி – தூத்துக்குடியில் மதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026