16வது மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மாநில ஐஎன்டியுசி பொதுச் செயலாளரும், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினருமான பெருமாள்சாமி, தூத்துக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி பனிமய மாதா திருத்தளத்திற்கு தங்கத் தேர் வழங்கியவராக வரலாற்றில் சிறப்பு பெற்ற பாண்டியபதி தேர்மாறன், சமூக நல்லிணக்கம் மற்றும் பண்பாட்டு மரபுகளை பேணிய மாமன்னராக போற்றப்படுவதாக நிகழ்ச்சியில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவி இசக்கியம்மாள் சேகர், பிரைன் நாத் நெல்சன், சுரேஷ்குமார், முருகேசன், முத்துராஜ், வழக்கறிஞர் செல்வம், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஐஎன்டியுசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், பாலன், கிரிதரன் பிரபு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயசிங், தியாகு, விஜய், திவாகர், துரை, ரகு, அபிஷேக், திருமணி, சுபாஷ், சுந்தர், முருகதாஸ், முருகேசன், முத்து, சுரேஷ், மணி, குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மாமன்னருக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் ஐஎன்டியுசி சார்பில் பெருமாள்சாமி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெப்பகுளத்தில் திடீர் விரிசல் – தெப்பத்திருவிழாவுக்கு முன் பழமை காக்க சீரமைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வலியுறுத்தல்!!
அடுத்த
அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பில் தூத்துக்குடியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026