தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் முத்து தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர்.
அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், “இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தங்களில் டிரம்ப் கூறிய கருத்துக்களை ஏற்கவில்லை என்பதற்காகவும், ரஷ்யாவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்காகவும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் அளித்து ஏழை மக்களை சுரண்டுகிறது.
11 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் அராஜகம் மட்டுமே நடக்கிறது. தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து எதிர்க்கட்சிகளை பழிவாங்குகின்றனர். நிர்மலா சீதாராமன் ஏழைகளின் மீது மட்டும் வரி சுமத்துகிறார்.
அண்ணாமலை அரசியல் படிக்க லண்டன் செல்ல வேண்டுமா? அடுப்பாங்கரையிலேயே கற்றுக்கொள்ளலாம். கம்யூனிஸ்ட் கட்சியினரே முதலில் தங்களது குடும்பங்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குடும்ப வன்முறை, மதுவழக்கம் போன்றவற்றை கட்சி ஒழுங்கு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துகிறது. பிற கட்சிகள் அப்படிச் செய்கிறார்களா? இல்லை. அதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சமுதாய ஒழுங்கை உருவாக்க முடியும்,” என்றார்.
அவர் தொடர்ந்து, “எடப்பாடி பழனிச்சாமி தன்னை சிங்கம் என்று நினைத்து தனியாக ரோடுஷோ செல்கிறார். ஆனால், அவர் தான் பிஜேபி பாம்பால் விழுங்கப்பட்ட தவளை. அதிமுகவின் கை கால் மட்டும் பாம்பின் வாயிலிருந்து வெளியே தெரிகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளோர் பிரச்சனைகளைத் தீர்க்க டெல்லி, அமித்ஷா வீடு நாடி செல்வது நீதிமன்றம் போல் மாறியுள்ளது. இது பாஜகவின் பழக்கமான அரசியல் கலை. பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து பின்னர் கபளிகரம் செய்தது போல அதிமுகக்கும் அந்த நிலை ஏற்படும்.
விஜய், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் மாற்று கொள்கைகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியே மாற்று கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறது,” என்று விமர்சித்தார்.
திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் பேசுகையில், “நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி எந்த விவாதத்திலும் ஈடுபடாமல் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் மட்டும் ஈடுபட்டார். விவாதமின்றி 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை பாழாக்க முயல்கிறார்கள். அதற்கு எதிராக திமுக அரசு நிலைபெற்றுள்ளது,” என்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் பேசுகையில், “ஸ்டெர்லைட் இயக்கத்தின் போது பல அதிகாரிகள் வெளிநாடு பயணங்களில் ஈடுபட்டனர். 99 நாட்கள் போராட்டத்திற்கு பின் 100வது நாளில் கலெக்டர் அலுவலகம் சென்ற மக்களை அலட்சியப்படுத்தினர். இன்ஸ்பெக்டர் ஹரிஹரனின் செயலால் கலவரம் ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஏழை மக்களுக்கு பட்டா வழங்காமல் தொழிலதிபர்களுக்கே சலுகைகள் வழங்கப்படுகின்றன,” எனக் கூறினார்.
கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, அப்பாதுரை, ராஜா, சண்முகராஜ், இடைக்குழு செயலாளர்கள் ரவிச்சந்திரன், நம்பிராஜன், முத்துக்குமார், மணி, ரவிதாகூர், கந்தசாமி, வேல்முருகன் உள்ளிட்டோரும் மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன், காசி, கணபதி சுரேஷ், ஜெபஸ்டீன்ராஜ், சுரேஷ், சித்ராதேவி, இனிதா, ஸ்ரீநாத், உப்புச்சங்கம் பொன்ராஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பழனிச்சாமி, செங்கோட்டையன் டெல்லிக்கு மாறி மாறி படையெடுக்கிறார்கள் – அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது : கம்யூனிஸ்ட் வாசுகி கடும் தாக்கு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிவந்தாகுளம் பள்ளியில் சுகாதார வளாகப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
மாப்பிள்ளையூரணியில் பாலஅருண் நினைவாக கபாடி போட்டி – வெற்றி அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026