பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தெரிவித்ததாவது தூத்துக்குடி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பனைமரம் ஏறி கள் இறக்கி பொதுமக்களுக்கு வழங்கி போராட்டம் நடத்தினார். இதை திசை திருப்பும் நோக்கத்தோடு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பனை வாரியத் தலைவரும், சமக தலைவருமான எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபால் ஆகியோர் சீமானை கைது செய்ய வேண்டும். என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதோடு இல்லாமல் நாடார் அமைப்பை சார்ந்த முத்து ரமேஷ் நாடார் சமூக மக்கள், மற்றும் பனை தொழிலாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து போராடி பெற்று தருகிறார். அவர் இந்த சமூகத்திற்கு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். அவரை மிரட்டும் தோணியில் அவரது இல்லத்திற்கு நேரில் பெண்களை அழைத்து கொண்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். சமக நிர்வாகிகள் இது கடுமையான கண்டனத்திற்குரியது.
இரண்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், மற்றொரு கட்சியை சேர்ந்த தலைவர் எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். அரசியல் லாபத்திற்காக மட்டும் மூன்று கட்சி தலைவர்களும் ஒருமித்த குரலில் சீமானுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக, சுயநலத்திற்காக செயல்படுவது.
இதற்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. இதோடு கட்சித் தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கட்சித் தலைவர்கள் கிருஷ்ணசாமி, எர்ணாவூர் நாராயணன், தனபால் ஆகியோருக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்வதாக நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தெரிவித்துள்ளார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மும்மத வழிபாடு செய்த அஜிதா ஆக்னல்!!
அடுத்த
கள் இறக்கும் போராட்டம் பற்றி முத்துரமேஷ் நாடார் பேசிய கருத்துரிமைக்கு எதிராக செயல் பட்டவர்களுக்கு என்.ஆர். தனபாலனின் கண்டன அறிக்கையை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) வரவேற்கிறது நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026