தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை திருநாள் கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி தலைமையில் (03.09.2025) புதன்கிழமையான இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அத்தப்பூ கோலம் போட்டு இருந்தனர். தொடர்ந்து பல்வேறு துறை மாணவிகள் உற்சாகமாக நடனமாடினார்கள் தொடர்ந்து மாணவிகள் தங்களின் பேராசிரியர்களையும் அழைத்து நடனமாட வைத்து மகிழ்ந்தனர்.

