தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) அமைப்பின் சார்பில்,(13.09.2025) அன்று பழைய காயல் பகுதியில் சத்துணவு பயிற்சி நிகழ்ச்சி மற்றும் ஸ்வச்சதா பக்வாடா சமூகப் பங்கேற்பு செயல்பாடுகள் நடைபெற்றன.
இளங்கலை விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் மில்லெட் லட்டு மற்றும் பலதானிய சத்துமாவு தயாரிப்பு முறைகளை விளக்கிக் காட்டினர். ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஊக்குவிக்கும் விதமாக, பாக்கெட் உணவுகளுக்குப் பதிலாக பாரம்பரிய உணவுகளைத் தேர்வு செய்வதன் நன்மைகள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனை வருமானம் ஈட்டும் சிறுதொழிலாக மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே மாணவிகள் வழியுறுத்திய கருத்தாகும்.
பயிற்சி நிகழ்ச்சிக்குப் பிறகு, மாணவர்கள் ஸவச்சதா பக்வாடா சுத்தம் செய்யும் இயக்கத்தில் பங்கேற்றனர். இதில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸ்சி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய அல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ஜோஸ்லின் மற்றும் பேராசிரியர்கள் முனைவர் ஷோபா, முனைவர் நிரஞ்சனி ஆகியோர் மாணவிகளுக்கு வழிகாட்டினர். இந்நிகழ்வின் மூலம் “ஆரோக்கியமான உணவு – சுத்தமான வாழ்வு” என்ற செய்தி சமூகத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி பழையகாயல் பகுதியில் சத்துணவு பயிற்சி மற்றும் ஸ்வச்சதா பக்வாடா சமூக பங்கேற்பு செயல்பாடுகள் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மக்கள் நலன் செய்ய வேண்டும் என இப்போதுதான் அறிவு வந்ததா அவர் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் ஏதாவது செய்திருக்கிறாரா? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?
அடுத்த
தூத்துக்குடியில் சட்ட உரிமைகள் கழகம் திறப்பு விழா - வக்கீல் ரமேஷ் பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026