தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்புத் திட்டம் 2025–2026 திட்டத்தின் கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய மினி ஜவுளி பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (28.11.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
முப்புலிவெட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் இந்த மினி ஜவுளி பூங்கா ஒரு புதிய முன்னேற்ற அத்தியாயமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிக்கு புதிய மைல்கல் – முப்புலிவெட்டியில் ரூ.75 லட்சத்தில் மினி ஜவுளி பூங்கா அடிக்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பொதுப்பிரச்சினைகளை தீவிரமாக முன்வைத்த அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி!!
அடுத்த
கோவில்பட்டியில் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழாவை தொடங்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026