தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கொசுக்களை ஒழிக்க மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட கொசு மருந்து தெளிக்கும் இயந்திரத்தின் பணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில், மேயர் புதிய இயந்திரத்தை பார்வையிட்டு அதன் செயல்பாட்டை அறிந்தார். பின்னர் மாலை நேரங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை அதிகாரிகளிடம் தொடங்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ், மார்ஷலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி தகவலின்படி, நகரின் அனைத்து பகுதிகளிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – மேயர் ஜெகன் தலைமையில் அதிரடி நடவடிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து திமுக பாக முகவர்கள் ஆலோசனை — அமைச்சர் கீதா ஜீவன் வழிகாட்டல்!!
அடுத்த
கஞ்சா போதை கும்பல் தாக்குதல்: “நாடார் சமூகத்திற்கு பாதுகாப்பில்லை!” – பேரவை குற்றச்சாட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026