தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மாப்பிளையூரணி ஊராட்சிக்குட்பட்ட KVK சாமி நகர், ஓம் சாந்தி நகர், அ.சண்முகபுரம், மாதா நகர், வடக்கு சோட்டையன் தோப்பு போன்ற பகுதிகளில் தொடர்ந்த மழையால் மழைநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீரை வெளியேற்றும் பணிகளை மின் மோட்டார்களின் உதவியுடன் உடனடியாக துரிதப்படுத்தவும், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை விரைவாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் பள்ளமாக சேதமடைந்த சாலைகளில் நடைபெற்று வரும் சரள் அடிக்கும் சாலை மேம்பாட்டு பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு உதவி பொறியாளர் ரவி மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ் இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின்
கிளை செயலாளர் முருகன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமண விழாக்களில் பங்கேற்று வாழ்த்தினார்
மழை ஆய்வுக்குப் பிறகு தூத்துக்குடி தன்பாடு உப்பு திருமண மண்டபத்தில் நடந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பரமசிவன் இல்ல திருமண விழாவில் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில் ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் KTC நகர் மாதா மாளிகையில் நடைபெற்ற சீவலப்பேரி வேல்பாண்டி இல்ல திருமண விழாவிலும் எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தூத்துக்குடி
மழை நெருக்கடியில் மக்களுடன் நேரில் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா — திருமண விழாக்களிலும் பங்கேற்று வாழ்த்துகள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்டெர்லைட் மூடப்பட்ட தூத்துக்குடியில் குளிர் மாற்றம்: வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மகிழ்ச்சி பதிவு!!
அடுத்த
சிலம்பத்தின் சத்தம் சென்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒலிக்கிறது — தேசியப் போட்டிக்கு தூத்துக்குடியின் சிறப்பான வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026