ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்எம்.சி. சண்முகையா பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.

அதைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தரமான பாதுகாப்புடன் கூடிய உணவு வழங்க ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ சண்முகையா அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் பலர் உடன் இருந்தனர்.
