தூத்துக்குடி (17.09.2025) புதன்கிழமை நேற்று மாலை 6.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு புது தெருவில் உள்ள முஸ்லிம் சமுதாய கூடத்தில் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் “யுத்தம் இன்றி சுத்தம் செய்” எனும் நூலை தோழர் மின்னல் அம்ஜத் அவர்கள் வெளியிட, அதை புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி ஆர்வலர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.