தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் (11.08.2025) திங்கட்கிழமையான இன்று காலை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமையேற்று, விருதுகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (Govt Polytechnic college) நடைபெற்ற
"போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி"
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு,பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.
அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், ஆகியோர் பங்கேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பிரபு, ஏஎஸ்பி மதன், தாசில்தார் முரளிதரன், கல்லூரி முதல்வர், மற்றும் ஆசிரியர்கள், அரசுத்துறை அதிகாரிகள், திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாணவ மாணவிகள், உட்பட பலர் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.