தூத்துக்குடி நகரில் காந்தியடிகளின் 157-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில், வ.உ.சி சாலை கிழக்கு மண்டலத்தில் (பழைய மாநகராட்சி அலுவலக வளாகம்) அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு காந்தியடிகளின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர்.
காந்தியடிகளின் உண்மைப் பாதை, அஹிம்சை மற்றும் சமூக நீதி குறித்த பாடங்கள் மக்கள் மனதில் என்றும் நிலைக்க வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காந்தியடிகளின் 157-ஆம் ஆண்டு பிறந்த தினத்தில் அமைச்சர்கள், ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ, மேயர் மரியாதை !!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கல்வியால் சமூக மாற்றம் உருவாக்கிய காமராஜருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவு அஞ்சலி!!
அடுத்த
போதை ஒழிப்பு உறுதி மொழி பேரணி – தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026