தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் கனமழையினால் காற்றாட்டுவெள்ளம் சாலைகள் வழியாக நகரின் பல பகுதிகளில் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதனை தடுக்கும் நோக்கில் இந்தாண்டு முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மடத்தூர் இரயில்வே தண்டவாளம் வழியாக பக்கிள் ஓடையில் இணையும் பசும்பொன்னகர், முத்துநகர், ஆசீர்வாத்நகர், பாலையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கரையைக் பலப்படுத்தி தேவையற்ற கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணியை என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்புணர்வு திட்டம் (CSR Scheme) கீழ் மேற்கொள்வதை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளில் கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்போது நகரின் வடிகால், ஓடைகள், பாலங்கள் ஆகியவற்றை சீரமைத்து, நீர் சீராக பாயும் வகையில் அனைத்து தூர்வாரும் பணிகளும் முழுமையாக செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை செயல் அதிகாரி ஆனந்த ராமானுஜம், துணை பொது மேலாளர் சரவணன், துணை முதன்மை மேலாளர்கள் ரகுபதி, ராம்குமார், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன், மாநகர வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் செல்வலட்சுமி, மாணவரணி துணைச் செயலாளர் சத்யா, தொழிலாளர் அணி துணைத் தலைவர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் அர்ஜுனன், வட்டச் செயலாளர்கள் சுரேஷ், செல்வராஜ், பொன்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், 2025–2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மீன்வளக் கல்லூரி செல்லும் புதிய பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளக் கல்லூரி முதல்வர் பொறுப்பு ஆதித்தன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காற்றாட்டுவெள்ளம் தடுப்பு தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனை விதை விதைப்போம் – பனை மரம் காப்போம்! இயற்கையை காக்கும் நோக்கில் ALL CAN TRUST அமைப்பின் 386வது வார பனை விதை நிகழ்வு!!
அடுத்த
125 ஏக்கர் சி.வ.குளத்தில் முள் காடு அகற்றும் பணிகள் தீவிரம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாபெரும் நடவடிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026