தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 மற்றும் 2024 ம் ஆண்டு பெய்த கனமழையின் போது மாநகரபகுதியில் குடியிருப்புகளுக்குள் வௌ்ளம் புகுந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனா். 2023 ம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த மழைக்கு பிறகு எடுக்கப்பட்ட சில நடடிவக்கையினால் 2024 ம் ஆண்டு பாதிப்பு பாதியாக குறைந்தது. அதன் பின்பு புதிதாக பல்வேறு வடிகால்களை அமைத்து மழைநீரை கடலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

விரைவில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு நிர்வாகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி தீவிரமாக களமிறங்கி மழை பாதிப்பை தடுக்கும் முன்னெச்சாிக்கை பணிகளை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடக்கூடிய இபி காலனி முதல் துரைக்கனி நகர் வரையிலான ஓடையை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஓடை கல்லூாி நகா் வழியாக மாவட்ட தொழில் மையம் அருகில் பக்கிள் ஓடையில் இணைக்கும் வகையில்  அமைந்துள்ளது.

இதனையடுத்து இபி காலணி முதல் துரைக்கனி நகா் வரை நடைபெற்று வரும் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
 
வட்டாட்சியர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலா் சுரேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட்,  ஆகியோர் உடன் இருந்தனர்.