தூத்துக்குடி மாவட்டத்தின் 6 வது புத்தகத்திருவிழா நிகழ்ச்சியில் “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் எதிர்கால சந்ததியினர்களான இளைய சமுதாயத்தினர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், வரலாறு, பண்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6 வது புத்தகத் திருவிழா "தொடர்ந்து படி தூத்துக்குடி" நிகழ்ச்சியில் "தொன்மைப் போற்று" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
விழாவில் கலெக்டர் இளம்பகவத், ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நாரயணவடிவு, இந்திரா, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், இணைச் செயலாளர் மகேஸ்வரன்சிங், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டச்செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், சுரேஷ்மகாராஜா, பொன்னுச்சாமி, கவுன்சிலா்கள் விஜயக்குமாா், ஜான், பகுதி அணி அமைப்பாளா் சுரேஷ்குமாா், பெருமாள் கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சர் கீதாஜீவன் நினைவு பாிசு வழங்கினாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதிமுகவை விமா்சிப்பதற்கு எந்த நடிகருக்கும் தகுதி கிடையாது செங்கல்பட்டு கூட்டத்தில் எதிா்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சிஎம்என் ஷட்டில் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான இறகு பந்து போட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026