தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் ஆதரவுடன் சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரன்நகா் சந்தனமாாியம்மன் கோவில் இளஞைர் அணி நண்பா் குழு இணைந்து முருகேசன் நாடாா் நினைவு கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாநில அளவிலான கல்லூாி மாணவ மாணவிகளுக்கான ஆண் பெண் மின்னொளி கபடி போட்டி  நடைபெற்றது.
      
சந்தனமாாியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிக்கு விஜயராகவன் தலைமை வகித்தாா். கபடி கந்தன், கருணாகரன், முத்து கணேஷ்குமாா், சங்கரேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சண்முகராஜ் வரவேற்றாா்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கபடி போட்டியை தொடங்கி வைத்தாா். பெண்களுக்கான இறுதி போட்டியில் தூத்துக்குடி சென்ட் மோிஸ் கல்லூாி அணியும், கோபிச்செட்டி பாளையம் பிகேஆர் அணியும் மோதியதில் கோபிச்செட்டி பாளையம் பிகேஆர் அணி முதல் பாிசை பெற்றது. ரூ 25 ஆயிரம் ரூபாயும் கோப்பையும் பெற்றது.

ஆண்களுக்கான இறுதி போட்டியில் சென்னை நியூ காலேஜ் அணியும், கரூர் சேகரன் கல்லூாியும் மோதியதில் சென்னை நியூ காலேஜ் அணி வெற்றி பெற்று ரூ 25 ஆயிரம் ரூபாயும் கோப்பையும் பெற்றது. முன்னதாக கபடி போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாிசுத்தொகையும் கோப்பையும் வழங்கினாா்.

விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி, மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜனகா், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமாா், தொழிலதிபா் பாலகிருஷ்ணன், தலைமை செயற்குழ உறுப்பினர் செந்தூா்மணி, அரசு வழக்கிறஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், பூங்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ஏசுவடியான், மற்றும் முனியசாமி கோவில் கௌரவ ஆலோசகா் சண்முகசுந்தரம், வக்கீல் கிருபாகரன், போல் பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை,  உள்பட பலர் கலந்து கொண்டனா்.
     
கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அா்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன், அமெச்சூா் கபடி கழக இணைச் செயலாளர் கபடி கந்தன் ஆகியோர் செய்திருந்தனா்.