தூத்துக்குடி மாநகரின் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா உற்சவம் கடந்த 21ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனின் பல்வேறு அலங்காரங்களுடன் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் பக்தி பேரொலியில் நடைபெற்று, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
இந்த விழாவின் ஏழாம் நாள் மண்டகப்படியாக, முன்னாள் தர்மகர்த்தாவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி குடும்பத்தின் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் கோவில் உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், காரியதரிசி முனியசாமி, ஆடிட்டர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, கணக்கர் தெய்வேந்திரன், ஆலோசகர்கள் துரைச்சாமி, சித்திரைவேல், சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பெரியசாமி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வள்ளிராஜன், ஜெயபாண்டி, முருகன், பாலு, கணேஷ்காந்தகுமார், பாலமுருகன், அருண் ஜெயக்குமார், விஜயகுமார், பூவலிங்கம், அருணகிரி, ராஜ்குமார், முருகேசன், ராஜலிங்கம், சிவசுந்தர், பாலசுப்பிரமணியன், கணேசன், சண்முகம், கணேசமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் திமுக மாநில பேச்சாளர் சரத்பாலா, பொதுக்குழு உறுப்பினர் இராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார், வட்டச்செயலாளர் ராஜாமணி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கவுன்சிலர் ஜான்சிராணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, அவைத்தலைவர் அற்புதராஜ், வட்டப்பிரதிநிதி அருணகிரி உள்ளிட்ட பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி தர்மகர்த்தாவாக இருந்து பணியாற்றிய புகழ்பெற்ற கோவில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி ரயில்வே சாலை வடிகால் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026