தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல் மழைக்காலத்தில் மாநகரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,

அதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதியில் இருந்து மாநகர எல்லையான கோயில்பிள்ளை நகர், தங்கம்மாள்புரம், சூசை நகர், அய்யன் கோயில் தெரு, சத்யா நகர், தெர்மல் நகர் கேம்ப், ஆகிய இடங்களுக்குள் மழை நீர் வராமல் இருப்பதற்காக நடைபெற்று வரும் தற்காலிக வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
ஆய்வின் போது மண்டல தலைவர் பாலகுருசாமி அவர்கள், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் அவர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் முருகராஜ் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், முத்துவேல் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.