தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு எடுத்து வருவதாக மேயர் தெரிவித்தார்.

மேயர் கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக சண்முகபுரம் பிரதான சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கழக நிர்வாகி ஏசுவுடியான், வட்ட கழக செயலாளர் சுரேஷ் மகாராஜா, வட்ட கழக பிரதிநிதி பால ரூபன் ஆகியோர் உடன் இருந்தனர்.