தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல மழை நீர் மாநகரப் பகுதிகளில் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரப்பட்டு வரும் நிலையில்,

அதன் ஒரு பகுதியாக திரேஸ்புரம் பகுதியிலுள்ள முகத்துவாரத்தில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகப் போகும் இடங்களை பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

உடன் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.