தூத்துக்குடி ஜமாத்தார்கள் செய்தியாளர்கள் சந்திப்பன் போது ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பள்ளி ஆகும். கடந்த 2016ம் ஆண்டு வரை திரேஸ்புரம் மஹல்லா, ஜாமிஆ மஹல்லா, முகமது சாதலியாபுரம், ரஹ்மத்துல்லாபுரம் மட்டுமே நிர்வகித்து வந்தோம். ஜாமிஆ பள்ளிக்கு காலம் காலமாக 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகம் அமைத்து வந்தோம்.
2016ம் ஆண்டுக்கு பிறகு 2021 வரை ஜாமிஆ பள்ளி நிர்வாகம் வக்பு வாரிய நிர்வாகம் செய்து வந்தது. தி.மு.க ஆட்சிக்கு பிறகு அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் ரகுமானை வக்பு சேர்மனாக தி.மு.க அரசு நியமித்தது. அதன்பிறகு தூத்துக்குடி ஜாமிஆ பள்ளியின் நிர்வாகத்தில் முஸ்லிம் லீக்கின் அதிகாரத்தை அதிகப்படுத்த சேர்மன் அப்துல் ரகுமான் தமிழ்நாட்டில் அதிக சொத்துக்களைக் கொண்ட பள்ளிகளில் ஒன்றான ஜாமிஆ பள்ளி நிர்வாகத் தேர்தல் நடத்தாமல் ஜனநாயகத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களைச் சார்ந்த நபர்களை வைத்துக்கொண்டு, இடைக்குழு (Adhoc) ஒன்றை அமைத்தார் முன்னாள் சேர்மன் அப்துல் ரகுமான்.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் பலமுறை முறையிட்டும், போராடியும் செவிசாய்க்காமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். தற்போது திமு.க அரசு நியமித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினரான நவாஸ்கனியை நியமித்தது. அவரும் முன்னாள் சேர்மன் அப்துல் ரகுமான் எதைச் செய்தாரோ அதையே செய்து வருகிறார். தூத்துக்குடி ஜாமிஆ பள்ளியில் இடைக்கால குழு நியமிக்க திரேஸ்புரம் மஹல்லா, ஜாமிஆ மஹல்லா, முகமது சாதலியாபுரம், ரஹ்மத்துல்லாபுரம் ஆகிய ஜமாத்திலிருந்து விருப்பமனு அனுப்புமாறு அறிவிப்பு ஜாமிஆ பள்ளிவாசல் நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டது.
அதன்பின்பு மேலே குறிப்பிட்டுள்ள 4 ஜமாத்தார்களும் மஹல்லாவில் இருந்து விருப்பமனு வக்புக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மீண்டும் வக்பு வாரியமும் திமுக அரசும் சேர்த்து ஜெய்லானி தெருவைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நபர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் மற்றும் முகமது சாதலியாபுரம் மஹல்லா நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து இடைக்கால குழு அமைத்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
பேட்டியின் போது மஸ்ஜித் முகத்தஸ் (சுன்னத்வல்) ஜமா அத் கமிட்டி, திரேஸ்புரம், தூத்துக்குடி. தலைவர் ஷாஐஹான், செயலாளர் முகமது தாஹீர் பொருளாளர் முகைதீன் பாதுஷா, துணைத் செயலாளர் மைதீன், பட்டாணி மைதீன், அப்துல் ரகுமான், ரஹ்மத்துல்லாபுரம் சுன்னத் வல், பள்ளிவாசல் தலைவர் P. அலாவுதீன், செயலாளர் ஜாபர் சாதிக், உறுப்பினர் ஜாகிர் உசேன், மற்றும் காதர் உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட மஸ்ஜீதே முகத்தஸ் (சுன்னத்வல்) ஜமா - அத் கமிட்டி கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நடைபெறும் மதிமுக கூட்டத்திற்கு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் அழைப்பு!!
அடுத்த
ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் திராவிட மாடல் அரசை கண்டித்து மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026