தூத்துக்குடி மாவட்டத்தின் 6 வது புத்தகத்திருவிழா நிகழ்ச்சியில் “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சா்மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எதிர்கால சந்ததியினர்களான இளைய சமுதாயத்தினர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், வரலாறு, பண்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு அறிவுறுத்தினார்.
   
அதன்படி 22 ம் தேதியான நேற்று மாலை புத்தக திருவிழாவை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து விழா பேரூரையாற்றினாா். இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடக்கிய புகைப்பட அரங்கம் திறப்பு விழாவிற்கு கலெக்டா் இளம்பகவத் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி திறந்து வைத்து மாணவிகளுடன் கலந்துரையாடி அங்கு அமைக்கப்பட்டுள்ள 106 புத்தக அரங்குகளையும் பாா்வையிட்டாா். முன்னதாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை பறக்க விட்டாா்.

விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையா் பானோத் ம்ருந்கேந்தா் லால், மாவட்ட வன அலுவலா் ரேவதிரமன், உதவி ஆட்சியா் பயிற்சி புவேனஷ்ராம், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிா்ஷ்டராஜ், மாநகராட்சி இளநிலை பொறியாளர் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிகள் பிரபாகா், ஜேஸ்பா்,மற்றும் மணி அல்பட் செய்தி மக்கள் தொடர்பு அலுவலா் நவீன்பாண்டியன், உள்பட தலைமை ஆசிாியா்கள் ஆசிாியா்கள் பள்ளி மாணவ மாணவிகள் அரசுத்துறை சார்ந்த அலுவலா்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனா்.