தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்ற முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் தங்களது குறைகள் சம்மந்தமான கோரிக்கை மனுவை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட மேயர் மனுவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
முகாமில் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்திமதி, ஜெயசீலி, கற்பககனி, தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின், நாகேஸ்வரி மற்றும் சுப்புலட்சுமி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
