அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கிய உத்தரவின்பேரில், அண்ணல் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட ஜே பேரவை செயலாளர் அமலதாசன்பழம் உள்ளிட்ட பல்வேறு அணி, பிரிவு, சங்க நிர்வாகிகள் பெரும்பாலோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மேலும், மீனவணி நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு உறுப்பினர்கள், முன்னாள் வட்ட செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், உப்பு தொழிலாளர் சங்கம் சார்பினர், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள், நகர–மாவட்ட மேலாண்மை உறுப்பினர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகளிர் அணி சாய் சுதா, ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணு தாய், முத்துமாரி, ரெக்ஸி, மாரியம்மாள், லெட்சுமி உள்ளிட்ட பெண்கள் பெரும்பான்மையாக பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்நிகழ்வு, அம்பேத்கரின் சமூக நீதி சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் சிறப்பாக அமைந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அரியநாயகிபுரத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கு சிறப்பான தொடக்கம்!!
அடுத்த
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் வணிகர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஜாதி மோதலை முறியடித்த எஸ்.பி ஆல்பர்ட் ஜான் – ஏஎஸ்பி மதன் அதிரடி! பல்வேறு அமைப்புகள் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026