தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் விருப்பமனு பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் விருப்பமனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக மாநில வணிக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்தார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அதற்காகவும் தனியாக ஒரு விருப்பமனுவை தாக்கல் செய்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் விருப்பமனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ரயில் பாதை சீரமைப்பு பணிகள்: கோவில்பட்டி–வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!!
அடுத்த
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026