கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சமீபத்திய சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக தெரிவித்து விமர்சனம் செய்ததற்காக அவர்கள்மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சட்டம் மக்கள் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் விமர்சன உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வழங்கி இருப்பதை நினைவுபடுத்தி, இதனை மீறி நடவடிக்கை எடுப்பது மக்கள் அடக்குமுறைக்கு ஒப்பானது என மக்கள் நல உரிமை அமைப்பின் அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள விவகாரத்தை முன்னிட்டு ஆளுங்கட்சியைத் தவிர்த்து அப்பாவி மக்கள்மீது வழக்கு பதிவு செய்வது முற்றிலும் தவறு. இது மக்கள் உரிமைகளை மீறும் செயல். பொதுமக்களின் குரலை அடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. நீதிமன்ற விசாரணை நடந்து வரும் நிலையில் அரசியல் அழுத்தம் இல்லாமல் உண்மையான நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.
அவர் இந்த நடவடிக்கை குறித்து தீவிர கவலை தெரிவித்ததுடன், மக்கள் மீது பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
கரூரில் மக்கள் மீது பொய் வழக்கு – அடக்குமுறையா? அடிப்படை உரிமை மீறல் என மக்கள் நல உரிமை அமைப்பு கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொது மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் – சண்முகபுரம் வடிகால் விரைவில் நீட்டிப்பு!!
அடுத்த
லயன்ஸ் டவுன் பரிசுத்த சசாயா மாதா ஆலய பங்கு மற்றும் SR இருதய சிகிச்சை மையம் (SR HEART CARE) இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் – நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026