தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பாஜக கிளைத் தலைவர்கள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் மற்றும் தீபாவளி பரிசு வழங்கும் விழா உற்சாகமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி சேது பாதையில் அமைந்துள்ள அம்மு மஹாலில் நேற்று புதன்கிழமை (15.10.2025) மாலை 7 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் அவர்கள் தலைமையேற்று, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துராமலிங்கம், சிவராமன், நவமணிகண்டன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் கே.என்.ஆர். பரமசிவம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், வடக்கு மண்டல தலைவர் சுதா, கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், திருச்செந்தூர் மண்டல தலைவர் செல்வகுமாரன், வடக்கு மண்டல பிரபாரி சரவணன், கிழக்கு மண்டல பிரபாரி சத்தியசீலன், ஏரல் மண்டல பிரபாரி காளிராஜா, வடக்கு மண்டல முன்னாள் தலைவர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் விருந்தோம்பல் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலாஜி, வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், வடக்கு மண்டல பொதுச் செயலாளர் சங்கர் கணேஷ், மகளிர் அணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், மகளிர் அணி துணைத் தலைவர் உஷா தேவி, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டத் தலைவர் மணிகண்டன் ஆகியோரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு, அனைவரும் மகிழ்ச்சியுடன் இனிமையான நிமிடங்களை பகிர்ந்துகொண்டனர்.
தூத்துக்குடி
பாஜக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு – உற்சாகமாக நடைபெற்ற விழா!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நாயுடு மகாஜன சங்கத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டெடுக்க நடவடிக்கை!!
அடுத்த
தூத்துக்குடி நகரில் மழை நீர் அகற்றும் பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் கண்காணிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026