தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 387 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 24 மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளை கனிவுடன் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உடனடியாக மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
மேலும், பத்திரிகையாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக மனுக்கள் வழங்கி வரும் நிலையில், அவை இதுவரை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மக்கள் குறைகளுக்கு நேரடி தீர்வு – தூத்துக்குடியில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் திங்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ: தருவைக்குளத்தில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு – மாப்பிள்ளையூரணியில் அடிப்படை வசதிகள் ஆய்வுக்கூட்டம்!!
அடுத்த
“காங்கிரசுக்கு குடும்ப அரசியல் – பாஜகவுக்கு பதவி அரசியலா?” நிதின் நவீன் நியமனத்தில் பாஜக இரட்டை வேடம்: தூத்துக்குடி காங்கிரஸ் முரளிதரன் தாக்கு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026