தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று (29.10.2025) வார்டு வாரியாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் பங்கேற்பை உறுதிசெய்து, அவர்களிடமிருந்து நேரடியாக குறைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கும்வகையில் இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை மேம்பாடு, பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வடக்கு மண்டலம் 3வது வார்டு பகுதியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து குறைகள், கோரிக்கைகள் மற்றும் மனுக்களை நேரடியாக பெற்றனர். பொதுமக்கள் கூறிய ஒவ்வொரு பிரச்சனையும் பதிவு செய்யப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கு 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமை வகித்தார். 3வது வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள சாலை, கழிவுநீர் வடிகால், குடிநீர் மற்றும் தெருவிளக்கு தொடர்பான குறைகளை எழுத்துமூலமாக வழங்கினர்.
மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும், இதுபோன்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
மக்களின் மனுக்களுக்கு நேரடி பதில் – தூத்துக்குடியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேசியக் கொடியுடன் ஜார்கண்ட் முதல் காசிவரை ஸ்கேட்டிங் பயணம் – தூத்துக்குடியில் அஜய் குமாருக்கு உற்சாக வரவேற்பு!
அடுத்த
தூத்துக்குடி 45வது வார்டில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் – மதிமுக சார்பில் பொதுநல கோரிக்கைகள் மனுவாக வழங்கப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026