தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பேணும் முயற்சிகள் பல ஆண்டுகளாக சிறப்பாக நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது சில பகுதிகளில் சாதிய வேற்றுமை அடையாளங்கள் மீண்டும் தோன்றி வருவது கவலைக்கிடமாக உள்ளது.
மாவட்டத்தில் உள்ள எட்டு காவல் சப் டிவிஷன்களும், 56 காவல் நிலையங்களும் இணைந்து “மாற்றத்தை தேடி விழிப்புணர்வு” என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நடவடிக்கையில், சுவர், மின் கம்பம், தண்ணீர் தொட்டி, அரசு கட்டிடங்கள் போன்ற இடங்களில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்கள் முழுமையாக அகற்றப்பட்டன. இதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து சமூக ஒற்றுமை உறுதிமொழியும் பெறப்பட்டது.
இந்த முயற்சிகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால் அண்மைக்காலமாக சில பகுதிகளில் மீண்டும் சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள் வழியாக சாதிய வேற்றுமையை தூண்டும் வாசகங்கள், அடையாளங்கள் உருவாகி வருவதாகவும், முன்பு அகற்றப்பட்ட இடங்களிலேயே மீண்டும் வரையப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் இந்தச் செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்ததாவது:
“சாதிய அடையாளங்கள் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் இத்தகைய குறியீடுகள் தோன்றுவது மிகவும் கவலைக்கிடமானது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து எச்சரித்து, சமூக ஒற்றுமையை பேணும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்,” என தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீண்டும் தலைதூக்கும் சாதிய அடையாளங்கள் – உடனடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் டிரஸ்ட் சார்பில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது!!
அடுத்த
சமூக நலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026