தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடியில் வட்டக்கிளை மாநாடு இன்று (23.08.2025) காலை ரெங்கநாதபுரம் சி.எம். மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.



தூத்துக்குடி வட்டக்கிளை தலைவர் ஞானசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கண்ணன், ராபர்ட் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் தூத்துக்குடி வட்டக்கிளை பன்னீர்செல்வம் மனோகர் சிங் வரவேற்புரை நிகழ்த்தினார். தூத்துக்குடி வட்டக்கிளை செயலாளர் செல்வராஜ் வேலை அறிக்கை, மற்றும் தூத்துக்குடி வட்டக் கிளை பொருளாளர் சுந்தர் சிங் நிதிநிலை அறிக்கை வாசித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் TNRTWA தலைவர் சாம்பசிவன் பாராட்டு பெற்றார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்தையா, மாவட்ட பொருளாளர் TNRTWA கண்ணையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தீர்மானங்களை முன்மொழிந்து, வழி மொழிந்து மாநில இணைச் செயலாளர் TNRTWA வெ. லீலாவதி சிறப்புரை நிகழ்த்தினார். தூத்துக்குடி வட்டக் கிளை துணைத் தலைவர் இந்துமதி நன்றியுரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் மாநாட்டு கோரிக்கைகள் :-

1. மாநில அரசின் தேர்தல் வாக்குறுதியான 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் வழங்கிடு,

2. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கேஷ்லெஸ் ட்ரீட்மெண்ட் ஐ அமல்படுத்து. மருத்துவச் செலவுத் தொகை முழுமையும் ஓய்வூதியர்களுக்கு, குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கிடு,

3. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் (சிபிஎஸ்) திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்து,

4. அரசு ஆணை எண் 23 ன் படி (01.01.2006) முதல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு (01.01.2011) முதல் தேர்வு நிலை ஊதிய விகிதம் 5400 ஜிபி பணப்பலன் வழங்கப்பட்டதை பறிக்கும் அரசு கடிதத்தை வாபஸ் பெறு,

5. B.Lit., கல்வித் தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு B.EDD., உயர் கல்வித் தகுதிக்கு வழங்கிய ஊக்க ஊதியத்தை திரும்ப பெறுவதை நிறுத்திடுக,

6. 80 வயது நிறைவடைந்தவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப ஓய்வூதியத்தை 80 வயது தொடங்கும் நாளிலேயே வழங்குவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அரசாணை வெளியிடுக,

7. COMMUTATION பிடித்த காலத்தை 10 ஆண்டுகளாக குறைத்திடுக,

8. ஓய்வூதியர்களை பாதிக்கும் நிதி மசோதா 2025ஐ வாபஸ் வாங்குக,

9. மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட இரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்கிடுக, உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


மாநாட்டில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு பெரும் தொண்டாற்றிய அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.