தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நடைப்பயிற்சி நண்பர்கள் சார்பில் 2026 புத்தாண்டை முன்னிட்டு இன்று பூங்காவில் மாபெரும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் பூங்காவில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள், பொதுமக்களுக்கு ஸ்வீட், காரம் மற்றும் காப்பி வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, நகரின் தூய்மையை பாதுகாத்து வரும் ராஜாஜி பூங்கா துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டு, அவர்களின் சேவைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு, புதிய ஆண்டு நலன், ஒற்றுமை, சமத்துவம் நிறைந்ததாக அமைய வேண்டும் என வாழ்த்தினர்.


இவ்விழாவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் தொழிலதிபர்கள் ரத்னா தர்மராஜ், பூக்கடை செல்வராஜ், நடராஜன், சுப்பையா, ஆறுமுகம், பாலசுப்பிரமணியம், முருகேசன், ஜான், வழக்கறிஞர்கள் செல்வக்குமார், வேல்முருகன், மாஸ்டர் தங்கராஜ், எல்.ஐ.சி முகவர்கள் கணேசன், கந்தசாமி, ஜெயக்குமார், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ், ராமர், விக்னேஷ், சேகர், சங்கர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


மகிழ்ச்சியும் மனிதநேயமும் கலந்த இந்த புத்தாண்டு கொண்டாட்டம், அனைவரிடமும் புதிய நம்பிக்கையையும் சமூக பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது.