அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகையையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வா்த்தக அணி சார்பில் நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



2026 ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்லையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை கொண்டு லட்சிய பயனத்தை மேற்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.

அதன் 2 ம் கட்ட சுற்றுப்பயனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதம் இறுதியான 31 ம் தேதியும் அடுத்த மாதம் 1, 2 ஆகிய மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறாா். அவரது வருகையை யொட்டி சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து வர்த்தக அணி சாா்பில் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கைலாஸ் திருமண மஹாலில் 19ம் தேதி சனிக்கிழமையான நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளர் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என். சின்னத்துரை முன்னிலையில் வகித்தார். முன்னதாக அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா படத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த கூட்டத்தில், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் A.M. ஆனந்த ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் இரா. ஹென்றி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் செங்கான், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கிருஷ்ணா என்ற ராதாகிருஷ்ணன், கழக வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் R.L. ராஜா, பகுதி கழக செயலாளர் R. சிவசாமி வேலுமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U.S. சேகர், கழக பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட கழக இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் C. துரைசிங், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் A. வீரபாகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் P. ஜோதிமணி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், பகுதி கழகச் செயலாளர் R. பொன்ராஜ், L. நீலமேகவர்ணம் EX MLA, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் M C.P. ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R. ராஜகோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் M. ராஜாராம், முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் புகழும் பெருமாள், திருச்செந்தூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் லிங்க குமார், மற்றும் தலைமை கழக மாவட்ட சாா்பு அணிகள் ஒன்றிய நகர பேரூர் கிளைக்கழகம் வட்டக்கழகம் தொழிற்சங்கம் முன்னாள்கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் இந்நாள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உறுப்பினா்கள் உள்பட அதிமுக அனுதாபிகள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.