உலக மீனவர் தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் முத்துநகர் கடற்கரையில் மாபெரும் படகு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இன்று காலை தொடங்கிய இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதாஜீவன் தலைமையேற்று படகு போட்டியை கொடி ஏற்றி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மீனவர் நலவாரியம் உறுப்பினர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தமிழ்நாடு திமுக மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர், வட்ட, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான கலைஞரின் உடன்பிறப்புகள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் (21.11.2025) அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற இருப்பதாக நிகழ்வாய்வாளர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிரடி படகு போட்டி: அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: முகாம்களை நேரில் பார்வையிட்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் அழகுபடுத்தல் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026