தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025 - 2026 ம் நிதி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி (11.09.2025) அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வைத்து நடைபெற்றது.
                 
பள்ளி மாணவர்களுக்கான பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்குமரன் முதல் பரிசுக்கும் தோழப்பன் பண்ணை அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி மீனா இரண்டாம் பரிசுக்கும் தூத்துக்குடி எக்ஸ்என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீ பேபிஷா மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
    
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இரண்டு சிறப்பு பரிசுகள் வேப்பிலோடை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி லதா மற்றும் தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 7 ம் வகுப்பு மாணவி ஷனா நஸ்மீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
கல்லூரி மாணவர்களுக்கான பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி கோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி இளங்கலை உளவியல் இரண்டாம் ஆண்டு மாணவி மரிய ரேச்சல் முதல் பரிசுக்கும் தூத்துக்குடி வ.உ.சி கல்வியில் கல்லூரி ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவி வசந்தகுமாரி இரண்டாம் பரிசுக்கும் தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி முதுகலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி அஸ்வர்னிஹா மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
     
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ 5000 இரண்டாம் பரிசு ரூ 3000 மூன்றாம் பரிசு ரூ 2000 மேலும் பள்ளி மாணவர்களுக்கென  நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கும்  சிறப்பு பரிசு ரூபாய் 2000 வழங்கப்பட்டது.