தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி பல்க் ஜங்ஷன் பிள்ளையார் கோயிலில் வைத்து (20.7.2025) ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 7 மணி அளவில் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இளம் புரட்சியாளர் பூவை டாக்டர் எம். ஜெகன் மூர்த்தியார் ஆணைகேற்ப புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் டி. ருசேந்திர குமார் புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பரணி P. மாரி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி,

தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்   மா. மாரிச்செல்வம் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சி. எட்வின் ஜோசப் மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் S. சிறு லட்சுமி மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மைக்கேல் ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் APLF அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணைச் செயலாளர் S. கணேசன் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் டாக்டர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் MLA கையொப்பமிட்ட பதவிக்குண்டான சான்றிதழ்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் வழங்க வேண்டும்.

2. கட்சிக்கு புதிய நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தின் போது நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர் அவர்கள் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்.

3. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி கூட்டணி வைக்கின்ற கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தொழிற்சங்க செயலாளர்
V. சிவனனைந்த பெருமாள் மாவட்ட பொறியாளர் துறை இணைச் செயலாளர் T. மகேந்திரன் மாவட்ட வணிகர் அணி செயலாளர் A. சுடலை மாடன் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் A. தீப சித்ரா தூத்துக்குடி மாநகர 59 வார்டு வட்டச் செயலாளர் R. சூசை மாணிக்கம் 59 வது வார்டு வட்ட தலைவர் T. ராஜா 59 வது வார்டு வட்ட பொருளாளர் முனீஸ்வரன் 54 வது வார்டு வட்ட செயலாளர் M. மதி ஜூலியட் 49 வது வார்டு வட்டச் செயலாளர் ஐகோர்ட்ராஜா உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் பதவிக்குண்டான சான்றிதழ்களை வழங்கி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கருத்துரைகள் வழங்கினார்.