தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தூத்துக்குடி மாநகர கிளை சார்பில் வெளியிடப்பட்ட 96 வெண்பா நூலின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நூல் திறனாய்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) காலை தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாடியில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் இலக்கியச் செம்மல் பே. சங்கரலிங்கம் (பணிநிறைவு பெற்ற முதுகலைத் தமிழாசிரியர்) நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். தொடர்ந்து முனைவர் மு. செல்வி (உதவிப் பேராசிரியர், காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி), சோ. சோலைராஜா மற்றும் கவிஞர் க. சண்முகசுந்தரம் ஆகியோர் நூலின் இலக்கிய சிறப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.


குமிழ்முனைப் புத்தக வண்டி மற்றும் குமிழ்முனைப் பதிப்பகத்தின் நிறுவனர் சைமன் அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் பாலசேகர், ஷெரீப், வள்ளிநாயகி, மகாலெட்சுமி, பத்மநாபன், மாணிக்கவாசகம் உள்ளிட்ட பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தூத்துக்குடி மாநகர கிளை சார்பில் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்கள் நிறைவுரையாற்றி, வெண்பா மரபின் தொடர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் இத்தகைய நிகழ்வுகள் அவசியம் எனக் குறிப்பிட்டார்.