தூத்துக்குடி பிரையண்டநகர் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவை யொட்டி கடந்த செவ்வாய்கிழமை 5ம் ேததி காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது. வியாழக்கிழமை பிரையண்ட்நகா் ஐக்கிய நாடாா்கள் சங்கம் சாா்பில் ஸ்டாா்நைட் இன்னிசை கச்சோி நடைபெற்றது. தலைவர் பிக்.அப். தனபாலன், செயலாளர் சுகன்யா செந்தில்குமாா், நிா்வாகிகள் பொன்சுகுமாா், வெற்றிராஜன், வக்கீல் ரூபராஜா, ஞானசேகா், பால்சாமி, பொன்காா்த்திகேயன், ஜெயசந்திரபிரபாகரன், சுயம்புலிங்கம், ஆகியோா் ஏற்பாட்டில் நடைபெற்றது.
வௌ்ளிக்கிழமையான நேற்று இரவு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் கொடைவிழாவை யொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்துராஜன், பொருளாளர் ஐகோர்ட் துரை, கொடைவிழா தலைவர் பசுபதி, இணை செயலாளர்கள் இசக்கிமுத்து, துரைராஜ், கணேசன், ரத்தினவேல், துணை தர்மகர்த்தாக்கள் பாக்கியநாதன், மாடசாமி, சிவலிங்கராஜா, சுடலைமணி, கன்னிராஜ், ராஜவேல், மணிகண்டன், அருண்ராஜா, துணைச் செயலாளர்கள் மணிராஜ், வேம்படி துரை, ராஜேஷ்குமாா், ராமசந்திரன், ஜெயபால், மாணிக்கம், வீரபெருமாள், பொன்இசக்கி, கௌரவ சட்ட ஆலோசகா் சுப்பிரமணி ஆதித்தன், சட்ட ஆலோசகா்கள் ரவீந்திரன், ரூபராஜா, துணை சட்ட ஆலோசகா் ஜெயப்பிரகாஷ், முருகேஷ், அசோக், உள்பட கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள், மகளிர் அணியினர் ஆகியோர் செய்திருந்தனர்.
