தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்வில் பசுமை படை மாணவர் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பொறுப்பாசிரியர் ராஜகுமார் அனைவரையும் வரவேற்று, பசுமை பாதுகாப்பில் மாணவர்கள் வகிக்கும் பங்கை விளக்கினார்.
தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி, பிளாஸ்டிக் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எடுத்துக்கூறி, துணிப்பையின் முக்கியத்துவத்தை விளக்கினார். தொடர்ந்து ஆசிரியர் ஜெயிலின், “நாம் ஏன் துணிப்பை பயன்படுத்த வேண்டும்?” என்ற தலைப்பில் மாணவர்களிடம் சுவாரஸ்யமாக கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் அனைவரும் “பிளாஸ்டிக் அல்ல… துணிப்பையே பயன்படுத்துவோம்!” என உறுதிமொழி மேற்கொண்டனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
தூத்துக்குடி
“பிளாஸ்டிக்குக்கு ‘விடை’ – துணிப்பைக்கு ‘வணக்கம்’ கூறிய தூத்துக்குடி மாணவர்கள்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆதிநாதர் பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு முயற்சி – உடனடி நடவடிக்கை கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக புகார் மனு!!
அடுத்த
விளாத்திகுளத்தில் கல்வி–கட்டமைப்பு மேம்பாட்டுக்கு எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன் பெரிய வரவேற்பு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026