தூத்துக்குடி மாநகராட்சி பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு சாலைகளில் தேங்கிக்கிடக்கும் மணல்திட்டுகளால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாநகராட்சியின் 60 வார்டு பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மணல் திட்டுகள் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜார்ஜ் ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மணல் திட்டுகளை அகற்றும் பணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்து, அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த உரிய உத்தரவுகளை வழங்கினார்.
பின்னர், வாடி தெரு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சாலைப் பணிகள் தரமாகவும் விரைவாகவும் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை – தூத்துக்குடியில் மணல் திட்டுகள் அகற்றுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில்: “கடமை உணர்வே இளைஞர்களின் மிகப்பெரிய பலம்” — அமைச்சர் கீதாஜீவன் உரை!!
அடுத்த
“மதுவில்லா தமிழகத்துக்கான முதல் படி… வைகோ தலைமையில் ‘சமத்துவ நடை’ வீரர்கள் தேர்வில் கலிங்கப்பட்டியில் உற்சாக அலை!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026